பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா |

ஓடிடி தளத்திற்கென்று தயாராகும் படம் டார்லிங்ஸ். ஷாருக்கான் மனைவி கவுரி கானுடன் இணைந்து ஆலியாபட் தயாரித்து, நடிக்கிறார். அவருடன் ஷெபாலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அனில் மேகா ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷால் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். ஜஸ்மீத் கே.ரீன் இயக்கி உள்ளார்.
மும்பையின் நெருக்கடியான பகுதியில் வாழும் நடுத்தர மக்களின் கதை. அந்த கதையின் ஊடாக ஒரு தாய்க்கும், மகளுக்குமான உறவை சொல்லும் படம். வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.