சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் டிவியின் தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினி சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த திருமணத்தில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வந்திருந்தார். அப்போது ஷாருக்கானை கட்டித்தழுவி தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ஒரு பதிவும் போட்டிருக்கிறார் டிடி.
அதில், ஷாருக்கானை இறுக கட்டிப்பிடித்து நான் சொல்ல விரும்பிய அனைத்தையும் கூறினேன். இத்தனை வருடங்கள் நீங்கள் எங்களுக்கு கொடுத்தது பல நினைவுகள். நீங்கள் எங்களுக்கு கொடுத்த மகிழ்ச்சி அளவில்லாதது. அனைத்திற்கும் நீங்கள் தகுதியானவர். சிறந்த வாழ்க்கையின் சிறந்தவர் நீங்கள் என்று தெரிவித்திருக்கிறார் டிடி. இந்த பதிவை டேக் செய்து நம்முடைய கிங்கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் சினிமா துறையில் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில் இந்த புகைப்படத்தை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் போன்று இதற்கு முன்பும் பின்பும் யாருமில்லை. இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணமான இயக்குனர் அட்லிக்கு நன்றி. ஜவான் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ய எனது வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார் திவ்யதர்ஷினி.