சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

அக்ஷய்குமார், சஞ்சய்தத், சோனுசூட், மனுஷி ஷில்லர் நடித்துள்ள படம் சாம்ராட் பிருத்விராஜ். ஹிந்தியில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளிவருகிறது.
12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜபுத்திர மன்னர் பிருத்விராஜ் சவுகான் வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். முகலாய சாம்ராஜ்யத்தை முறியடித்த இந்துஸ்தானி சாம்ராஜ்யத்தை சொல்லும் படம். இந்த படத்தின் சிறப்பு காட்சி டில்லியில் நடந்தது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா குடும்பத்துடன் சென்று பார்த்தார். படம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
13 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் தியேட்டரில் படம் பார்க்கிறேன். இந்தியாவின் கலாச்சாரப் போர்களை சித்தரிக்கும் இப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு இல்லாமல், இந்தியர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். இந்தப் படம் பெண்களை மதிக்கும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய கலாச்சாரத்தை சித்தரிக்கிறது.
இடைக்காலத்தில் பெண்கள் அனுபவித்து வந்த அரசியல் அதிகாரம் மற்றும் தேர்வு சுதந்திரம் பற்றி இந்தப் படம் பேசுகிறது. 2014ல் இந்தியாவில் ஒரு கலாச்சார விழிப்புணர்வு தொடங்கியது. அது இந்தியாவை மீண்டும் உயரத்திற்கு கொண்டு செல்லும். என்றார்.
இதற்கிடையில் லக்னோவில் இந்த படத்தை பார்த்த உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் படத்தை பாராட்டி இருப்பதோடு, வரிவிலக்கும் அளித்துள்ளார்.