பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
விஜய் நடித்த பீஸ்ட் படம் வருகிற 13ம் தேதி வெளியாகிறது. 14ம் தேதி யஷ் நடித்த கேஜிஎப் 2 வெளியாகிறது. ஒரே நேரத்தில் இரு பெரிய படங்கள் மோத வேண்டாம் என்று பலரும் கருத்து சொன்ன நிலையில் இரு படத்தின் தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவில் இருந்து பின் வாங்க விரும்பாததால் இரு படங்களும் வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.
இரு படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் நிலையில் அதே தேதியில் ஷாகித் கபூர், மிர்னால் தாகூர் நடித்த 'ஜெர்ஸி' படமும் வெளியாகிறது. தெலுங்கில் வெளியான ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த படம். தெலுங்கில் படத்தை இயக்கிய கெளதம் தான் ஹிந்தியிலும் இப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த இரு பெரிய படங்களின் வெளியீட்டால் ஜெர்ஸியின் வசூல் பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ஷாகித் கபூர் கூறியிருப்பதாவது: எங்கள் படத்தை வெளியிடுவதற்கான சரியான நேரம் இது என்பதால் நாங்கள் வெளியிடுகிறோம். அவர்களும் அதையே சிந்தித்திருப்பார்கள். இரண்டு பெரிய படங்கள் வெளியானாலும், எங்கள் படத்திற்கு ஒரு இடம் இருக்கும்.
நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய படங்களை விரும்பி பார்ப்பேன். பீஸ்ட் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என நான் நம்புகிறேன். அதேபோல், கேஜிஎப் 2 மக்கள் மிகவும் விரும்பும் ஒரு படத்தின் தொடர்ச்சியாகும். எல்லா படங்களுக்கும் தியேட்டர்களில் இடம் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மார்க்கெட் இருக்கிறது, நான்கு நாட்கள் விடுமுறை இருக்கிறது. எனவே அனைத்து படங்களும் நன்றாக ஓட வேண்டும். பெரிய படங்கள் ஒன்றாக வருவது பெரிய விஷயம். அதை நாம் நேர்மறையாக பார்க்க வேண்டும். என்கிறார் ஷாகித் கபூர்.