பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? |

கடந்த சில நாட்களாகவே தென்னிந்திய மீடியாக்களில் பூஜா ஹெக்டே தவறாமல் இடம்பிடித்து வருகிறார். கடந்த வாரம் பிரபாஸுக்கு ஜோடியாக அவர் நடித்த ராதே ஷ்யாம் படம் வெளியானது. இதையடுத்து விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இவை தவிர சிரஞ்சீவி, ராம்சரண் இணைந்து நடித்து, விரைவில் வெளியாகவுள்ள ஆச்சார்யா படத்தில் ராம்சரண் ஜோடியாகவும் நடித்து முடித்து விட்டார்.
இன்னொருபக்கம் பாலிவுட்டில் சல்மான்கானின் பைஜான் மற்றும் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர்சிங் நடிக்கும் சர்க்கஸ் என இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார் பூஜா ஹெக்டே,. இதில் சர்க்கஸ் படத்தில், தான் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து ஒரு சுவாரசியமான விளக்கமும் கொடுத்துள்ளார் பூஜா ஹெக்டே.
பூஜாவின் தந்தை, இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகராம். அவரது படங்கள் வெளியாகும்போது அதில் தன்னை கவர்ந்த ஒரு கதாபாத்திரமாகவே மாறி, ஒரு வாரத்திற்கு வீட்டில் உள்ளவர்களிடம் அதுபோலவே நடந்து கொள்வாராம்.. அந்த அளவுக்கு ரோஹித் ஷெட்டியின் தீவிரமான ரசிகராக அவர் இருக்கும் நிலையில் தான் சர்க்கஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பூஜா ஹெக்டேவை தேடி வந்தது.. தனக்காக இல்லை என்றாலும் தனது தந்தையின் விருப்பத்திற்காகவாவது சர்க்கஸ் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் பூஜா ஹெக்டே.