நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நடிக்க இருக்கிறார் என்பது ஆச்சர்யமான செய்தி. ஆனால் சிரஞ்சீவியின் நட்புக்காக தான், முதன்முறையாக அதிலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் சல்மான் கான். ஆம், மலையாளத்தில் மோகன்லால் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.
இந்த படத்தில் சிரஞ்சீவியின் பாடிகார்டாக நடிக்கும் நபர் யார் என்கிற சஸ்பென்ஸ் நிலவி வந்தது. அதில் ராம்சரண் நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்த வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக அந்த கதாப்பாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
தற்போது அவர் சிரஞ்சீவி உடன் காட்பாதர் படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இதற்கிடையே அவருக்கு இந்த படத்தில் சம்பளமாக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, அதை பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தான் நட்புக்காக தான் நடிப்பதாகவும், அதனால் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கிக்கொள்ள மாட்டேன் என சல்மான் கான் மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு தகவல் டோலிவுட் வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.