பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் ஒருவரான ஆலியா பட். இவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலியின் 'கங்குபாய் கத்தியவாடி' அடுத்த வாரம் பிப்ரவரி 25ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே சில பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய சமூகவலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் ஆலியா, தனது ஹிந்திப் படத்தின் பிரமோஷன் வேலைகளுக்கு மத்தியிலும் 'பாத் டப்'பில் எடுத்த போட்டோ ஷுட் ஒன்று சக நடிகைகளும் லைக் செய்து கமெண்ட் செய்யும் அளவிற்கு வைரலாகியுள்ளது.
அனுஷ்கா ஷர்மா, ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் அந்த புகைப்படங்களக்கு லைக் செய்துள்ளனர். கிளாமர் போட்டோ ஷுட், பிகினி போட்டோ ஷுட் போல தற்போது 'பாத் ரூம் போட்டோ ஷும், பாத் டப் போட்டோ ஷுட்' ஆகியவையும் பிரபலமாகி வருகின்றன.