லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
மும்பை பெண் தாதா கங்குபாய் கத்தியவாடி வாழ்க்கையை மையமாக கொண்டு அதே பெயரில் படம் தயாராகி உள்ளது. இதில் கங்குபாயாக ஆலியா பட் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வசித்த கங்குபாய் எப்படி பெண் தாதா ஆனார் என்பது குறித்து சுருக்கமாக சொல்லப்பட்டு இருந்தது.
வருகிற 25ம் தேதி கங்குபாய் கத்தியவாடி வெளியாக உள்ள நிலையில், கங்குபாயின் வளர்ப்பு மகன் படத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தி உள்ளார். மும்பை ரெட் லைட் ஏரியாவில் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்களின் துயர் துடைத்த எங்கள் அம்மாவை விலைமகளாக இந்த படத்தில் மாற்றி விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதோடு மும்பை உயர்நீதி மன்றத்தில் படத்துக்கு தடைகேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள பதிலில் "ஹுசைன் ஜைதி என்பவர் எழுதிய மாபியா குயின் ஆப் மும்பை என்ற நூலை தழுவி, கங்குபாய் குடும்பத்தினரின் எழுத்துபூர்வமான அனுமதியை பெற்றே படம் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.