திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள வெப் தொடர் ராக்கெட் பாய்ஸ். அபய் பன்னு இயக்கி உள்ள இந்த தொடரில் ஜிம் சர்ப், இஷ்வாக் சிங், ரெஜினா கெசாண்ட்ரா, சபா ஆஷாத், ரஜித் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். சித்தார்த் ராய் கபூர் தயாரித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த விண்வெளி ஆராய்ச்சியின்போது அன்றைய விஞ்ஞானிகள் சந்தித்த பிரச்சினைகளை கதை களமாக கொண்டு இது உருவாகி உள்ளது. இதில் இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஹோமி ஜோ பாபா கதாபாத்திரத்தில் ஜிம் சர்ப்பும், டாக்டர் விக்ரம் சாராபாய் கதாபாத்திரத்தில் இஷ்வக் சிங்கும், பிரபல நடன கலைஞர் மிருணாளியாக ரெஜினா கஸாண்ட்ராவும், அப்துல் கலாம் வேடத்தில் அர்ஜுன் ராதாகிருஷ்ணனும் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா குறித்து தவறாக சித்திரித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திருவிதாங்கூரில் இருந்து மோனோசைட் தாதுக்களை ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்ததாகவும் இதற்கு மன்னர் உடந்தையாக இருந்ததாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுகுறித்து மன்னர் சித்திரை திருநாளின் மருமகள் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் கூறியிருப்பதாவது: ராக்கெட் பாய்ஸ் வெப் தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாளை உண்மைக்கு மாறாக ஆதாரமில்லாமல் தவறாக சித்தரித்து உள்ளனர். எனவே இந்த தொடருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.