ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
தீபிகா படுகோன் நடிப்பில் தயாரான கெஹ்ரயான் என்ற படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு அடல்ட் ஒன்லி படம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்த வாழ்பவர்களிடைய உருவாகும் காதல் பற்றிய படம். இதில் தீபிகா படுகோன் படுக்கையறை காட்சிகளில் தாராளமாக நடித்துள்ளார். படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை குப்பை என்று வர்ணித்திருக்கிறார் கங்கனா ரணவத். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் இந்த தலைமுறையை சேர்ந்தவள்தான். தயவு செய்து டீன் ஏஜ் நவீன திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம். தரமற்ற திரைப்படங்கள் எப்போதும் தரமற்றமவை தான். எந்த வகை ஆபாசத்தை காட்டியும் அந்த படத்தை காப்பாற்ற முடியாது. இது அடிப்படை உண்மை. கெஹ்ரையான் படத்தில் எந்தவிதமான ஆழமான கருத்துகளும் இல்லை. என்று எழுதியிருக்கிறார்.