ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், தனுசுடன் இணைந்து நடித்திருந்த அட்ராங்கிரே என்ற படம் சமீபத்தில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தில் இவர்தான் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை கடற்கரையை ஒட்டி உள்ள ஒரு பங்களாவில் தற்போது வசித்துவரும் அக்ஷய் குமார், மும்பையின் மேற்கு பகுதியில் 1878 சதுரடியில் ஒரு புதிய பங்களா வாங்கி இருப்பதாகவும், அதன் மதிப்பு 7.8 கோடி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு அந்த பங்களா குறித்த ஒரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அக்ஷய்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மீடியாக்களில் வெளியானது போன்று புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பது உண்மைதான். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் முடியவில்லை. எனது புதிய வீடு குறித்து ஊடகங்களில் வெளிவரும் புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்கிறார்.