ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அவரது பெயரை நீக்கினார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் சோசியல் மீடியாவிலிருந்து தனது கணவரின் பெயரை நீக்கி இருக்கிறார். இது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. அப்படி என்றால் பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனஸை விவாகரத்துச் செய்யப் போகிறாரா? என்ற கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அதை மறுக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தார். அதோடு பிரியங்காவின் தாயாரும் இதை மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இதுப்பற்றி பிரியங்கா சோப்ரா அளித்த ஒரு பேட்டியில், ‛‛சமூகவலைதளத்தில் பயனரின் பெயர் என்னுடைய பக்கத்தில் பொருந்த வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன். ஆனால் இது இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. சோசியல் மீடியா நண்பர்களே அமைதியாக இருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆக, இந்த விவகாரம் பெரிதாவதற்கு முன்பே தனது கணவர் நிக் ஜோனஸ்க்கும், தனக்குமிடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா.