மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரினா கைப், நடிகரான விக்கி கவுசல் இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையும், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளைத் தெரித்திருந்தார்.
“அழகான உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். வாழ்க்கை முழுவதும் இணைந்திருக்க, அன்பு, புரிதலுடன் இருக்க வாழ்த்துகள். கடைசியாக நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சி. உங்கள் வீட்டிற்கு நீங்கள் சீக்கிரமே வரலாம். கட்டுமான சத்தத்தை இனி நாம் கேட்க மாட்டோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை ஜுஹு கடற்கரைப் பகுதியில் உள்ள பெரும் வசதிகளைக் கொண்ட அபார்ட்மென்ட்டில் அனுஷ்கா, விராட் கோலி வசித்து வருகிறார்கள். அவர்களது வீட்டிற்குப் பக்கத்து வீட்டில்தான் புதுமணத் தம்பதிகளான கத்ரினா, விக்கி குடி வரப் போகிறார்களாம்.
கடற்பகுதியை நோக்கி உள்ள அபார்ட்மென்ட் ஒன்றை புதுமணத் தம்பதிகள் வாடகைக்கு எடுத்திருக்கிறார்களாம். மாத வாடகையாக 8 லட்ச ரூபாயும், அட்வான்சாக 1.75 கோடியும் கொடுத்திருக்கிறார்களாம்.