'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை |
கடந்த 16ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான இந்திப் படம் சர்தார் உதம். இந்த படம் தற்போது இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரண்டாகி வருகிறது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலா பாக்கில் அமைதியான வழியில் போராடிய மக்களை ஜெனரல் டயர் என்ற ஆங்கில தளபதி கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தார்கள்.
இந்த படுபாதக செயலை செய்த ஜெனரல் டயர் பணி ஒய்வு பெற்று லண்டனில் வசித்து வந்தார். அவனை தேடிச் சென்று சுட்டுக் கொன்ற உதம் சிங் என்ற இளைஞனின் கதைதான் இந்த படம். இந்த படத்தின் கதை மட்டுமல்லாத அதை உருவாக்கிய விதம், பயன்படுத்தப்பட்ட வசனங்கள், நடித்தவர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என எல்லா விதங்களிலும் படத்திற்கு பாராட்டு கிடைத்து வருகிறது.
உதம் சிங்காக பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும், பனிதா சந்து அவரது காதலி ரேஷ்மாவாகவும், ஹாலிவுட் நடிகர் ஷான் ஸ்கார் ஜெனரல் டயராகவும், ஸ்டீபன் கோஹன் லண்டன் உயர் போலீஸ் அதிகாரியாகவும், அமோல் பர்சார் பகத்சிங்காகவும் நடித்திருக்கிறார்கள்.
தற்போது இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு அனுப்ப தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள் பட்டியலிலும் இந்த படம் இடம்பெற்றுள்ளது. அமேசான் தளத்தில் அதிக பார்வையாளர்களை கவர்ந்து முதல் இடத்திலும் இருக்கிறது. இந்தப் படம் தமிழ் சப் டைட்டிலுடன் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.