வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
2022ம் ஆண்டில் முன்னணி இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவருமே ஐந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். ஆனால், முந்தைய வருடங்களுடன் ஒப்பிடும் போது அவர்கள் அனைவருமே குறைவான சூப்பர் ஹிட் பாடல்களைத்தான் கொடுத்திருக்கிறார்கள். எதிர்பார்க்கப்பட்ட சில படங்களின் பாடல்கள் ஏமாற்றத்தையும் தந்திருக்கின்றன.
ஒரு படத்தில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் என்று சொல்லும்படியாக இந்த ஆண்டில் அதிக அளவில் பாடல்கள் இல்லை. ஓரிரு பாடல்கள்தான் யு-டியூபிலும் ரசிகர்களை திரும்பத் திரும்பப் பார்க்க வைத்திருக்கின்றன. இந்த 2022ம் ஆண்டில் யு-டியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் என இரண்டு பாடல்கள் மட்டுமே சாதனை புரிந்துள்ளது. யு-டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டாப் 10 தமிழ் சினிமா பாடல்களை இங்கு வரிசைப்படுத்தியிருக்கிறோம்.
1.பீஸ்ட் - அரபிக்குத்து
இசை - அனிருத்
பாடல் - சிவகார்த்திகேயன்
பாடியவர்கள் - அனிருத், ஜோனிதா காந்தி
லிரிக் வீடியோ - 495 மில்லியன்
வீடியோ - 353 மில்லியன்
இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் லிரிக் வீடியோ, சாங் வீடியோ என இரண்டுமே 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை புரிந்த பாடல் இது. விஜய் நடிக்கும் படம் ஒன்றில் ஒரு பாடலை முதல் முறையாக சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இப்பாடல் வெளியான அன்றே பெரும் வரவேற்பைப் பெற்றதால் இந்த அளவிற்கு சாதனை புரிந்துள்ளது. லிரிக் வீடியோ விரைவில் 500 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைக்க உள்ளது.
https://www.youtube.com/watch?v=8FAUEv_E_xQ
https://www.youtube.com/watch?v=KUN5Uf9mObQ
2.விக்ரம் - பத்தல…பத்தல…
இசை - அனிருத்
பாடல் - கமல்ஹாசன்
பாடியவர்கள் - கமல்ஹாசன், அனிருத்
லிரிக் வீடியோ - 100 மில்லியன்
வீடியோ - 47 மில்லியன்
கமல்ஹாசன் நடிக்கும் ஒரு படத்திற்கு அனிருத் இசையமைத்தது இதுவே முதல் முறை. இப்படத்திற்கான அறிமுக வீடியோ முன்னோட்டம் ஒன்றிலேயே தனது பின்னணி இசையில் அசத்திய அனிருத் இப்படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் வித்தியாசமான விதத்தில் அமைத்திருந்தார். இந்த 'பத்தல பத்தல' பாடல் கமல்ஹாசன் எழுத்து, குரல், நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக அமைந்து 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக அமைந்தது.
https://www.youtube.com/watch?v=9VpeTiz81gc
https://www.youtube.com/watch?v=1OjZnGZjOA0
3.காத்து வாக்குல ரெண்டு காதல் - டிப்பம் டிப்பம்
இசை - அனிருத்
பாடல் - விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் - அந்தோணி தாசன், அனிருத்
லிரிக் வீடியோ - 92 மில்லியன்
வீடியோ - 48 மில்லியன்
விக்னேஷ் சிவன், அனிருத், விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி சேர்ந்த படம். நயன்தாரா, சமந்தா என இரண்டு கதாநாயகிகள் இந்தப் படத்தில் இருந்தது ரசிகர்களுக்கு 'அட்ராக்ஷன்' ஆக இருந்தது. வழக்கம் போல தனது அதிரடி இசையில் இந்தப் பாடலைக் கொடுத்து சூப்பர் ஹிட்டாக்கிவிட்டார் அனிருத்.
https://www.youtube.com/watch?v=j64M3CACcr4
https://www.youtube.com/watch?v=tFX2UvkQj44
4.காத்து வாக்குல ரெண்டு காதல் - டூ
இசை - அனிருத்
பாடல் - விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் - அனிருத், சுனிதி சௌஹான், சஞ்சனா கல்மஞ்சே
மியூசிக் வீடியோ - 61 மில்லியன்
வீடியோ - 87 மில்லியன்
ஒரு படத்தில் ஒரு முன்னணி ஹீரோயின் என்றாலே பெரிய விஷயம், இந்தப் படத்தில் இரண்டு முன்னணி ஹீரோயின்கள் என்றால் கொண்டாட்டத்திற்கு சொல்லவா வேண்டும். அதிலும் ஒருவரே இரண்டு ஹீரோயின்களைக் காதலிக்கும் கதை. அந்த சிச்சுவேஷனுக்காக அமைந்த இந்தப் பாடல், ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான பாடலாக அமைந்தது.
https://www.youtube.com/watch?v=MJmxdlCtFWU
https://www.youtube.com/watch?v=Lyr6c84d5AI
5.பீஸ்ட் - ஜாலி ஓ ஜிம்கானா
இசை - அனிருத்
பாடல் - கு கார்த்திக்
பாடியவர் - விஜய்
லிரிக் வீடியோ - 71 மில்லியன்
வீடியோ - 64 மில்லியன்
'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் சூப்பர் ஹிட் ஆகி முதலிடம் பிடித்த நிலையில் அப்படத்தின் மற்றொரு பாடலான இந்த 'ஜாலி ஓ ஜிம்கானா' பாடல், பாடலின் ஆரம்ப வரிகளுக்கேற்றபடியே ஜாலியான பாடலாக அமைந்து ஜாலியாகவும் படமாக்கப்பட்டது. விஜய் பாடும் பாடல் என்றாலே ஒரு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் பாடல் படம் முடிந்த பிறகு வந்ததுதான் ரசிகர்களுக்கு ஒரு குறையாக அமைந்தது.
https://www.youtube.com/watch?v=jmwU1iAC-IE
https://www.youtube.com/watch?v=PhxfspwMdww
6.டான் - பிரைவேட் பார்ட்டி…
இசை - அனிருத்
பாடல் - சிவகார்த்திகேயன்
பாடியவர்கள் - அனிருத், ஜோனிதா காந்தி
மியூசிக் வீடியோ - 82 மில்லியன்
வீடியோ - 65 மில்லியன்
அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணி என்றாலே அதில் பாடல்கள் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உண்டு. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய இரண்டு பாடல்கள் இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' இந்த ஆண்டின் நம்பர் 1 பாடலாகவும், டாப் 10ல் இந்த 'பிரைவேட் பார்ட்டி' பாடலும் இடம் பிடித்துவிட்டது.
https://www.youtube.com/watch?v=paDG3S3UmQM
https://www.youtube.com/watch?v=SPmec1w1sXU
7.டான் - ஜலபுல ஜங்கு…
இசை - அனிருத்
பாடல் - ரோகேஷ்
பாடியவர் - அனிருத்
லிரிக் வீடியோ - 98 மில்லியன்
வீடியோ - 49 மில்லியன்
இந்த ஆண்டில் அனிருத் இசையமைத்து வெளிவந்த படங்களில் அதிரடி, மெலடி, டூயட், சோகம் என அனைத்து விதமான பாடல்களும் இடம் பெற்றிருந்தது. அவரது படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி அடிக்கடி கேட்கப்பட வேண்டும் என்ற அவருடைய ஆவல் இந்த வருடமும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. இந்தப் பாடல் அவரது டிரேட் மார்க் அதிரடிப் பாடலாக அமைந்து ரசிகர்களைக் கொண்டாட வைத்த பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
https://www.youtube.com/watch?v=2VOL-VWXMnQ
https://www.youtube.com/watch?v=6KzeuDstzOY
8.த வாரியர் - புல்லட்…
இசை - தேவிஸ்ரீபிரசாத்
பாடல் - விவேகா
பாடியவர்ககள் - சிம்பு, ஹரிப்ரியா
லிரிக் வீடியோ - 123 மில்லியன்
வீடியோ - 45 மில்லியன்
தமிழ் சினிமாவிற்கு அவ்வப்போது வந்து ஏதாவது ஒரு சூப்பர் ஹிட் பாடலைக் கொடுத்துவிட்டு மீண்டும் தெலுங்குப் பக்கம் செல்பவர் தேவிஸ்ரீபிரசாத். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தில் இடம் பெற்ற இந்த 'புல்லட்' பாடல் வித்தியாசமான பாடலாக அமைந்து ரசிக்க வைத்தது. சிம்பு இரு மொழிகளிலும் இந்தப் பாடலைப் பாடியதால்தான் இந்தப் பாடல் அதிக கவனம் பெற்றது.
https://www.youtube.com/watch?v=RlA3WiUtXio
https://www.youtube.com/watch?v=u_nDlTN0fQk
9.திருச்சிற்றம்பலம் - மேகம் கருக்காத…
இசை - அனிருத்
பாடல் - தனுஷ்
பாடியவர் - தனுஷ்
லிரிக் வீடியோ - 55 மில்லியன்
வீடியோ - 85 மில்லியன்
தனுஷ், அனிருத் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த படம். எதிர்பார்த்ததைப் போலவே இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. படம் வெளிவந்த பிறகுதான் பாடல்கள் மீதான ஈர்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. இந்த 'மேகம் கருக்காத' பாடல் அதிகமான பார்வைகளைப் பெற்றிருந்தாலும் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான 'தேன்மொழி…பூங்கொடி' பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
https://www.youtube.com/watch?v=cEWwJxEq9Lg
https://www.youtube.com/watch?v=zYc83YbeU-U
10.திருச்சிற்றம்பலம் - தாய் கிழவி…
இசை - அனிருத்
பாடல் - தனுஷ்
பாடியவர் - தனுஷ்
லிரிக் வீடியோ - 31 மில்லியன்
வீடியோ - 73 மில்லியன்
இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டாக ஆரம்பித்தன. படம் வந்த பிறகு கதையுடன் இணைந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் இந்த டாப் 10ல் இடம் பெற்றிருந்தாலும் மற்ற பாடல்களும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த தனுஷ், அனிருத் கூட்டணி எதிர்பார்த்த ஹிட்டுகளைக் கொடுத்ததால் அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
https://www.youtube.com/watch?v=q6LjN1UVPkE
https://www.youtube.com/watch?v=7CajfS_iVQM
யு-டியூபில் அதிகப் பார்வைகள் பெற்ற பாடல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட மேலே கண்ட டாப் 10 பாடல்களில் ஒரு இடத்தைத் தவிர மற்ற 9 இடங்களையும் அனிருத்தே ஆக்கிரமித்துவிட்டார். யு-டியூபில் பாடல்களை அதிகம் பார்க்கும், கேட்கும் ரசிகர்களில் அனிருத் ரசிகர்கள்தான் அதிகம் இருக்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது. ஆனாலும், கடந்த சில வருடங்களாகவே டாப் 10 பாடல்களில் அனிருத்தின் பாடல்கள் நிச்சயம் இடம் பிடிக்கும். ஆனால், இந்த வருடத்தில் ஒட்டு மொத்தமாக அவரது ஆதிக்கமே இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ஏஆர் ரகுமான், யுவன்ஷங்கர் ராஜா, இமான், சந்தோஷ் நாராயணன், தமன் ஆகியோரது இசையில் வெளிவந்த சில படங்களின் பாடல்கள் ஹிட்டாக அமைந்தாலும் அவை அதிகப் பார்வைகளைப் பெறாத காரணத்தால் இந்த யு-டியூப் 10 பட்டியலில் இடம் பெறவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு டாப் 10 பாடல்களில் யுவன்ஷங்கர் ராஜா, தமன், சந்தோஷ் நாராயணன், விவேக் மெர்வின் ஆகியோரது பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த ஆண்டில் யுவன் இசையில் 'விருமன்' படத்தின் 'கஞ்சாப் பூவு' பாடல் மட்டும் அதிகப் பார்வைகளைப் பெற்றிருந்தது. ஆனாலும், டாப் 10க்குள் வர முடியவில்லை.
ஏஆர் ரகுமான் இசையில் வந்த 'பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு' படங்களின் பாடல்கள் ஹிட்டானாலும் அவை டாப் 10 பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு பார்வைகளைப் பெறவில்லை. தமன், இமான், சந்தோஷ் நாராயணன் ஆகியோருக்கு குறிப்பிடும்படியான ஹிட் பாடல்கள் அமையவில்லை. ஆச்சரியப்படும் அளவில் தேவிஸ்ரீபிரசாத் இந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். தெலுங்கில் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இந்த ஆண்டில் தமிழில் மற்ற இசையமைப்பாளர்களை முந்திக் கொண்டு டாப் 10ல் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2022ம் ஆண்டில் அதிகப் போட்டி இல்லாதது போலத்தான் தெரிகிறது. அதே சமயம் வரும் 2023ம் ஆண்டில் இந்தப் போட்டி கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது.