இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
அலைபாயும் இளையோர் கூட்டம் அம்புலி இவளின் வருகை கண்டு அடங்கிவிடும். வேல்வீசும் விழி, பால்பொங்கும் புன்னகையுடன், கொங்கு நாட்டில் கிளம்பி தலைநகரில் தனியிடம் பிடித்த இன்ஸ்டாகிராமின் இளவரசி நடிகை தர்ஷா குப்தா பகிர்ந்தது...
அழகிய ஆரம்பம்...
அம்மா தமிழ்; அப்பா மலையாளம். நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே கோவை. இளங்கலை கம்ப்யூட்டர் டெக்னாலஜி முடித்து பெங்களூருவில் ஆசிரியையாக வேலை பார்த்தேன்.
ஆசிரியை டூ சினிமா... எப்படி
தோழியை பார்க்க சென்னை வந்தேன். அப்போது மேகஸின் சூட். அவங்க மாடல் என்பதால் என்கிட்டேயும் கேட்டாங்க. அப்படிதான் மாடலிங் உள்ளே வந்தேன். ஆசிரியை பணியை விட்டுட்டு வந்தபோது அம்மாதான் சப்போர்ட் பண்ணாங்க. போக போக வெள்ளித்திரையில் வாய்ப்பு. முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே... தொடர்ந்து செந்துாரப்பூவே, இப்படி சின்னத்திரை நாடகங்களில் நடித்துள்ளேன்.
![]() |
ஐயோ பாவம் என்று கடக்க முடியவில்லை. போன லாக்டவுன் போல இன்றி, இம்முறை சாலையோரம் பலர் உணவின்றி கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவ பசுமை இயக்கத்தில் சேர்ந்து மீனவ குடும்பம், ஏழை எளியோருக்கு உதவுகிறேன்.
![]() |