அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நேரம், அமரகாவியம், பிரேமம், வெற்றிவேல், வேட்டையன் உள்பட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், கதாநாயகனாகவும் நடித்து திறமையை வெளிப்படுத்தியவர் அனந்த் நாக்.
இவர் நம்முடன் பகிர்ந்தது...
முழுப்பெயர் அனந்த் நாக், சொந்த ஊர் சென்னை. பொறியியல் முடித்து மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்த போது சினிமா ஆர்வத்தால் வேலையை விட்டு ராஜிவ் மேனன் நடத்திய ஒளிப்பதிவாளர் பள்ளியில் சேர்ந்து, அவருடன் 'கடல்' திரைப்படத்தில் பணியாற்றினேன்.
இதையடுத்து அல்போன்ஸ் புத்ரனிடம் 'நேரம்' திரைப்படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிகை நஸ்ரியா உடன் கலந்துரையாடுவது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. யதார்த்தமாக நடித்தால் சரியாக இருக்கும் என இயக்குனர் கூறியதால் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடிக்க முடிந்தது.
அதே போல அல்போன்ஸ் புத்ரனின் 'பிரேமம்' படத்திலும் நடிகை சாய் பல்லவியின் உறவினராக நடித்திருந்தேன். இந்த இரு படங்களிலும் எனது வழக்கமான உதவி ஒளிப்பதிவாளர் பணியை செய்து கொண்டு படத்திலும் எனக்கான காட்சியில் நடித்து திறமையை வெளிப்படுத்தினேன். இதற்கிடையில் 'அமரகாவியம்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பள்ளிச்சிறுவனாக நடித்தேன்.
கல்லுாரியில் படிக்கும் போது உடற்பயிற்சிகள் செய்ய துவங்கி இப்போது வரை செய்து வருவதால் எல்லா படங்களிலும் நல்ல உடல் தோற்றத்துடன் நடிக்க முடிகிறது. அமரகாவியம் படத்தில் மட்டும் பள்ளி சிறுவன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டியிருந்தது.
'வெற்றிவேல்' திரைப்படத்தில் சசிகுமாரின் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் எனக்காக பெண் பார்க்க சென்ற சசிகுமார் பிரச்னையில் மாட்டிக்கொண்டு மீண்டு வருவது போன்ற கதை. என்னை சுற்றியே கதை நகர்வது போன்று இருந்ததால் படம் முழுவதும் எனது கதாபாத்திரம் இடம் பெற்று நல்ல வரவேற்பு கிடைத்தது.
2013ல் துவங்கி 27 திரைப்படங்கள், இரு வெப் தொடரில் நடித்துள்ளேன். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் சக போலீஸ் அதிகாரியாக படகில் செல்லும் காட்சிகளில் எங்களுக்கு பல முறை உதவி செய்தார். அவருடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. நட்பு வட்டாரங்களால் தான் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனை தக்கவைத்து இன்னும் முன்னேற வேண்டும்.
திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அனைவரும் வெற்றியாளர்களாக மாறலாம்.