75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | 'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' |
கருமை பூசிமாயம் செய்யும் மான் விழிகள்... இனிக்கும் தேன் சிந்தி இதயங்களை காயம் செய்யும் பூவிதழ்கள்... மென்பஞ்சுதொட்டு செதுக்கிய மேகதேகம், கால் முளைத்து ஓடும் பேரழகின் வேகம், தென்றல் தீண்ட தெம்மாங்கு பாடும் சிங்கார குயில், கூந்தல் தோகை விரித்தாடும் ஒய்யார மயில் என... வர்ணிக்க வார்த்தைகள் தேட வைக்கும் சிரிப்பழகி நடிகை ஷிவான்யா பிரியங்கா பேசுகிறார்...
அழகின் அழகு ஷிவான்யா குறித்து
பிறந்தது மதுரை... அப்பா பிஸினஸ்க்காக பட்டுக்கோட்டையில் செட்டில் ஆனோம். காலேஜ், வேலைன்னு சென்னை போனதால் அங்கேயே தங்க வேண்டியதா போயிடுச்சு. அதனால் தான் சீரியல்கள், சினிமா வாய்ப்புகள் வந்தது.
எப்படி டிவி சீரியலில் நடிகையாக அறிமுகம்
சின்ன வயசிலயே எனக்கு நடிப்பு மேல் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. சென்னையில் பேங்க் ஒன்றில் வேலை பார்த்த போது தான் சீரியல் ஆடிஷன் போனேன். அதில் செலக்டான பின்பு தான் 'கல்யாண வீடு' சீரியலில் நடிகையாக அறிமுகமானேன்.
இதுவரை நடித்த சீரியல்கள், படங்கள் எத்தனை
நடிப்பு துறைக்கு வந்த மூன்று ஆண்டுகளில் 'கல்யாண வீடு' தவிர 'யாரடி நீ மோகினி', 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'காற்றின் மொழி' சீரியல்களில் நடிச்சிருக்கேன். இப்போ தான் 'தமிழ் குடிமகன்'னு ஒரு படத்தில் முதன் முதலாக நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ளே எத்தனை படம்னு கேட்டா...
தமிழ் குடிமகன் என்ன கதை, என்ன கேரக்டர்
'காதல் கசக்குதய்யா' ஹீரோ துருவா தான் ஹீரோ. கதை இப்போதைக்கு சஸ்பென்ஸ். சீக்கிரம் படம் ரிலீஸ் ஆகுது... இரண்டு ஹீரோயின்களில் நான் ஒரு ஹீரோயின். 'சண்டைக்கோழி' மீரா ஜாஸ்மின் மாதிரி சூப்பர் கேரக்டர். அடுத்து ஒரு படமும் நடிக்கிறேன்.
சீரியலில் கற்றது சினிமாவில் பயன்படுகிறதா
கண்டிப்பா... குடும்பத்தில் சினிமாவில் யாரும் இல்லை, நான் நடிக்க பயிற்சியும் பெற்றது இல்லை. சீரியலில் வந்து தான் நடிக்க கற்றேன். வித்தியாசமான கேரக்டர்கள் நடித்ததால் அனுபவங்கள் கிடைத்தது. அது இப்போது சினிமாவில் நடிக்க பயன்படுது.
மதுரை பொண்ணாக சென்னையில் நடிக்க சென்றது
எங்கே போனாலும் மதுரை பொண்ணுன்னு முகம் பளிச்சினு சொல்லிடும். திறமை இருந்தால் எந்த ஊர் பொண்ணாக இருந்தாலும் நடிப்பு துறையில் அங்கீகாரம் இருக்கு.
எதிர்காலத்தில் நடிக்க விரும்பும் கேரக்டர்கள் என்ன
வித்தியாசமான கேரக்டர்கள் நடிக்க ஆசை... மக்களுக்கு நல்ல ரீச் ஆகணும். கிளாமர் மட்டும் வேண்டாம். சீரியல், சினிமா எந்த வாய்ப்பு வந்தாலும் நடிப்பு திறமையை காட்ட தயாராக இருக்கிறேன்.
எதிர்கால லட்சியங்கள், கனவுகள் எல்லாம் இருக்கா
என்னை பாராட்டி, சீராட்டி வளர்த்து உற்சாகம் தரும் என் அம்மா தங்கம் விரும்பியபடி பெரிய பங்களா கட்டணும். என்னை நிரகாரித்தவர்கள் முன்னாடி பிரபல நடிகையாக நிரூபிக்க முயற்சி செய்கிறேன். அதில் வெற்றி பெறுவதே என் லட்சியம், கனவு.
சீரியல், சினிமா தவிர வேறு துறையில் ஷிவான்யா
ஹூம்ம்... இசைஅமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் 'நீ தேடும் போது'ங்குற ஆல்பம் சாங் ஒன்று நடிச்சிருக்கேன். இந்த ஆல்பம் சாங் பாடல் வரிகள் மட்டும் இப்போது ரிலீஸ் ஆகியிருக்கு.அதுவே பெரியளவு ரீச் ஆகியிருக்கு.