‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் (ரத்தம் ரணம் ரவுத்திரம்) படம் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரணம் நடிப்பில் கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளிவருகிறது. படம் குறித்து 3 ஸ்டார்கள் பேருகிறார்கள்.
ராம்சரண்:
இரண்டாவது முறையாக ராஜமவுலி இயக்கத்தில்...அவர் வேலை நிறைய மாறியிருக்கு. இலக்கை நோக்கிய பெரிய பயணத்தில் உள்ளார். பாகுபலி பார்த்து அவரிடம் பொறுமையா இருப்பதை கற்கிறேன். இந்த நடிகன் என்னுடன் எத்தனை ஆண்டு ஆனாலும் இருப்பான்னு இயக்குனர் நினைப்பது பெரிய விஷயம்.
எப்ப நீங்க நேரடி தமிழ் படங்களில் நடிக்கப் போறீங்க?
பொதுவான ‛பான் இந்தியன்' படங்களில் நடிக்க விரும்புகிறேன். தமிழ், மலையாளம், தெலுங்கு இயக்குனர்களாக இருந்தாலும் சரி பிரச்னை இல்லை.
எந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க விருப்பம்?
சிவகார்த்திகேயன் உடன் தான்... எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டாராக வருவார். அவரைத் தவிர இங்கே இருக்கும் பல நடிகர்கள் இயல்பாக நடிக்கிறார்கள். அரசியலுக்கு மட்டும் வரமாட்டேன்.
இயக்குனர் ராஜமவுலி:
ஆர்.ஆர்.ஆர்., ரசிகர்களை எந்த அளவு ஈர்க்கும்?பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ரசிகர்களை சீட்நுனிக்கு வரும்படி இருக்கும். அலைபேசி அல்லது வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாதபடி கதை நகரும். நடிகர்கள் அப்படி உயிரை கொடுத்து நடித்துள்ளனர். கை தட்டி, விசில் அடித்து கொண்டாடும் படம்.
உங்கள் மனதை கவர்ந்த சூப்பர் ஸ்டார் நடிகர்கள்..
உலகில் எவ்வளவு பெரிய நடிகர்கள் வந்தாலும் எனக்கு பெரிதாக தோன்ற மாட்டார். தற்போது ‛என் ராம் என் பீம்' கதை கேரக்டர்கள் மட்டுமே மனதில் உள்ளது. இக்கேரக்டர்கள் தவிர வேறு யாருமே சூப்பர் ஸ்டாரா தெரிய மாட்டார்கள்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., படப்பிடிப்பில்....
ஒரு காட்சி முடிந்ததும் வேற மூடுக்கு சென்றுவிடுவர். ஜாலியா ஜோக் அடிப்பாங்க. பெரிய நடிகர்கள் என நினைத்ததே இல்லை. நிஜமாகவே நண்பர்களாக இருந்தது தான் பெரிய அளவுக்கு உதவியா இருந்தது.
ஜூனியர் என்.டி.ஆர்:
நீங்க தமிழ் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?முடிந்தவரை பார்த்திருக்கேன். இங்கிருந்துதான் எல்லாரும் டோலிவுட், மோலிவுட் போயிருக்காங்க, ‛பாகுபலி'க்கு பின் இந்த மொழி வேற்றுமைகள் மறைந்துவிட்டது. இதனால் பலமொழி படங்களும் வர வாய்ப்பு உள்ளது.
இந்த படத்தின் மூலம் நீங்கள் கற்றது?
அமைதி, பொறுமை, கொரோனா உடன் வாழவும் கற்றேன். இந்த படம் ஆரம்பிக்கும் போதே 3 ஆண்டுக்கு மேல் ஆகும்னு தெரிந்துதான் சம்மதித்து நடித்து முடித்தேன்.