மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் பெரிய வெற்றியை பெற்ற படம் 'அய்யப்பனும் - கோஷியும். அதிகாரப் பின்னணி உள்ள முன்னாள் ராணுவ வீரனுக்கும், சப்-இன்ஸ்பெக்டருக்கும் நடக்கும் 'ஈகோ' மோதலின் உச்சக்கட்டம்தான் திரைக்கதை. அந்த திரைப்படத்தில் சப்- -இன்ஸ்பெக்டர் பிஜூமேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கொச்சியை சேர்ந்த கவுரிநந்தா. ரசிகர்கள் மத்தியில் 'கண்ணம்மா என்ற அந்த பட கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார். அவர் அளித்த பேட்டி...
குடும்பம், திரைப்பட வாய்ப்பு குறித்து
தந்தை ராணுவவீரர். என் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். தற்போது தாயுடன் வசிக்கிறேன். பி.காம்., முடித்துள்ளேன். கொச்சியில் பள்ளி, கல்லுாரி காலம் கழிந்தது. கல்லுாரி முடிந்ததும் தந்தையின் நண்பர் மூலம் 2010ல் 'கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் இயக்குனர் சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்துநில் திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதுதான் தமிழில் முதல் படம். 'பகடி ஆட்டம் திரைப்படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்தது தற்போது பிரபலமாக பேசப்படுகிறது.
அய்யப்பனும் -கோஷியும் படத்தில் பணியாற்றிய அனுபவம்
கேரளாவில் அட்டப்பாடி என்கிற வனப்பகுதியில் நடந்த சம்பவத்தை கருவாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அட்டப்பாடியில் இயக்குனர் சச்சி 2 ஆண்டுகள் தங்கி அனைத்து கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து அதே மாதிரி நடித்து காண்பித்து எங்களிடம் திறம்பட வேலை வாங்கியதால், ஒரு அற்புதமான படைப்பை நீங்கள் திரையில் பார்க்க முடிகிறது. கதை சொல்லலில் சச்சி ஒரு சகாப்தம். படப்பிடிப்பு தலங்களில் 'ஈகோ இன்றி நிறைய கற்றுக் கொடுத்தார்கள். கற்றுக் கொண்டேன்.
'கண்ணம்மா கதாபாத்திரத்திற்காக எடை குறைத்தீர்களாமே...
இறைச்சி தவிர்த்து, கீரை உள்ளிட்ட இயற்கை உணவுகளை மட்டுமே எடுத்து 67 கிலோவில் இருந்து 15 கிலோ எடையை குறைத்தேன். இயக்குனர் கற்றுக்கொடுத்த விஷயங்களை மட்டுமே நடித்தேன். கதாபாத்திரத்திற்காக ஆதிவாசிகளிடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. படம் பார்த்த அவர்களில் சிலர் நாங்கள் உடுத்தும் சேலை போலவே உடுத்தி, எங்கள் வீட்டு பெண் போலவே நடித்துள்ளீர்கள் என பாராட்டினர். அந்த நேரத்தில் விருதுகள் பெற்றதை விட பல மடங்கு பரிசு பெற்றது போல் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
'கண்ணம்மா பெயர் பிரபலமானது குறித்து
இது கடவுளின் அருள். படம் வெளியானது முதல் தற்போது வரை, என் பெயர் கவுரிநந்தா என்பதையே தோழிகள் கூட மறந்துவிட்டனர். கண்ணம்மா என்றே அழைக்கின்றனர். சமீபத்தில் 'சைமா விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு வந்த அனைத்து மொழி நடிகைகள், கன்னட நடிகை நடிகர்கள் உட்பட அனைவரும் கண்ணம்மா என்றே அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் வாங்கும் முதல் விருது இது. இந்த விருது பெற்றது இன்னும் திறன்களை வெளிப்படுத்த உந்துதலாக இருக்கிறது.
ரசிகர்களுடன் தரையில் அமர்ந்து படம் பார்த்தீர்களாமே
இந்த படம் ரிலீஸ் அன்று கொச்சியில் அம்மாவோடு முதல் நாள், முதல் காட்சிக்கு சென்றிருந்தேன். அம்மாவுக்கு உட்கார இடம் கிடைத்தது. எனக்கு இடம் கிடைக்கல. நின்று கொண்டும் பார்க்க முடியாது. அதனால் தரை டிக்கெட் இருக்கும் இடத்திற்கு சென்று உட்கார்ந்து பார்த்தேன். நான் நடித்த படத்தை மக்களோடு பார்த்தது மறக்கவே முடியாத அனுபவம்.
புதிய படங்கள்...
'மால் என தமிழில் ஒரு படம் நடித்தேன். அது விரைவில் வெளிவரும். 'பெர்முடா என்ற மலையாள படத்தில் நடிக்கிறேன். இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் பிடிக்கும்.
இவரை வாழ்த்த
gawrinandha@gmail.com