ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தன்னிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட நபருக்கு கோபமாக பதிலளித்துள்ளார் சீரியல் நடிகை சுஜா வாசன்.
பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் நடித்து பிரபலமான சுஜா வாசன், தற்போது கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சுஜா வாசன் அடிக்கடி தனது தோழியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இதை பார்த்த நம் நெட்டிசன்கள் கும்பலில் ஒருவர் சுஜாவிடம் அநாகரீகமான முறையில் நீங்க லெஸ்பியனா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் கடுப்பான சுஜா, "என்ன ஒரு முட்டாள் தனமான கேள்வி? ஒரு பொண்ணோட வெளிய போன உடனே இப்படி பேசுறீங்க. பையனோட வெளியே போனாலும் பையனோட சுத்துறானு சொல்லுவீங்க. நான் போடுற ஸ்டேட்டஸ் பிடிச்சா பாருங்க இல்லாட்டி பிளாக் பண்ணிருங்க. சம்மந்தமே இல்லாம பேசாதீங்க." என கோபமாக பதிலளித்துள்ளார்.




