ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
திருமணம் தொடரின் மூலம் ரியல் ஜோடிகளான ஸ்ரேயா - சித்து தற்போது புதிய வலை தொடரில் மீண்டும் ரீல் ஜோடிகளாக இணைகின்றனர்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் ஒன்றாக நடித்த ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து, அந்த தொடர் முடிந்த பின் வாழ்க்கையிலும் ஜோடிகளாக ஒன்றிணைந்தார்கள். அதன் பிறகு விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் சித்துவும் அன்புடன் குஷி தொடரில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து வந்தனர். இருப்பினும் திரையில் இவர்களது ஜோடியை மீண்டும் காண ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஸ்ரேயா - சித்து ஜோடி தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
குக் வித் காதல் என்கிற வலை தொடரில் ஸ்ரேயா சித்து இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த தொடருக்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. இந்த ஜோடிகள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.