ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள புதிய சீரியலில் நீச்சல் வீராங்கனை ஜனனி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் நேயர்களின் ஆதரவையும் கேட்டுள்ளார்.
நடிகர் நடிகைகளுக்கு வெள்ளித்திரையை விட அதிக புகழ் தரும் புகலிடமாக மாறிக் கொண்டிருக்கிறது சின்னத்திரை. இன்னொருபுறம் தொலைக்காட்சிகளும் டி ஆர் பி போட்டியில் சீரியல்களை எடுத்து குவித்து வருகின்றனர். இதனால் நடிக்கும் ஆர்வமுள்ள பலருக்கும் திரையில் தோன்றும் வாய்ப்பை சின்னத்திரை எளிமைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது நடிகையாக அறிமுகமாகிறார் ஜனனி பிரபு.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் சென்னை பட்டம் வென்ற ஜனனி ஒரு நீச்சல் வீராங்கனையும் கூட. மாடலிங் துறையில் சீரியஸாக முயற்சி செய்து கொண்டே நீச்சல் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். ஜனனி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நினைத்தாலே இனிக்கும் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இந்த தொடரில் நளினி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி நடிக்கவுள்ளார்.
நினைத்தாலே இனிக்கும் தொடரின் மெகா லாஞ்ச் நிகழ்ச்சி சமீபத்தில் ஜி தமிழ் ஸ்டுடியோவில் நடந்தது. அதன் புகைப்படங்களை தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ஜனனி, நடிகையாக களமிறங்கும் தனக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.
நினைத்தாலே இனிக்கும் தொடர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.