கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் |
இன்றைய தேதியில் சின்னத்திரையுலகின் செல்லக் குழந்தை ஷிவாங்கி தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட வந்தவர். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துருதுருவென வலம் வந்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். அவரது குழந்தை முகமும், சின்ன சின்ன சேட்டைகளும் டி.வி.ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஷிவாங்கி சிறுவயதில் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து கண்ணீர் மல்க கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நிகழ்ச்சியில் ஷிவாங்கி கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் ஷிவாங்கி சிறு வயதில் தன் குரலை எல்லோரும் கேலி செய்தார்கள் என்றும் தன்னை ஒரு மாதிரியான பெண் என்று விமர்சனம் செய்தார்கள் என்றும், அவமானத்தால் துடித்தேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதேசமயம் இப்போது தன்னை தங்களது வீட்டில் உள்ள பிள்ளை போல் கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார். அதோடு தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ஷிவாங்கி, அடுத்து விஜய், அஜித்துடன் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.