லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையில் இதயத்தை திருடாதே சீரியலின் மூலம் என்ட்ரியானவர் ஹிமா பிந்து. அந்த தொடரில் சஹானா கதாபாத்திரத்தில் நடித்து பல லட்ச ரசிகர்களின் மனதை தொட்ட அவருக்கு தமிழ்நாட்டில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தொடர்ந்து இலக்கியா தொடரில் நடித்து வந்த அவர், திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் சின்னத்திரைக்கு குட் பை சொல்லிவிட்டு வெளியேறினார்.
கவுண்டமணி நடித்துள்ள ஒத்த ஓட்டு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து ராகவா லாரண்ஸின் காஞ்சனா 4 படத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே, நோரா பதேகி ஆகிய பிரபல அழகிகள் நடித்து வர அவருடன் ஹிமாவும் நடிப்பது தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைய போகிறது என பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாவ் சொல்லி வருவதுடன் தமிழ் சினிமாவிற்கு அடுத்த கதாநாயகி ரெடி எனவும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.