‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் | முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா? | அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கிரைம் கதை | யாருக்கோ... ஏதோ சொல்கிறார் தீபிகா படுகோனே… | மீண்டும் ஓடிடியில் 'குட் பேட் அக்லி' : இளையராஜா பாடல்கள் மாற்றம் |
சின்னத்திரை நடிகரான நேத்ரன் சில தினங்களுக்கு முன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இந்நிலையில், சக நடிகரும் நண்பருமான வருண் உதய் நேத்ரன் குறித்து உருக்கமான சில செய்திகளை கூறியிருக்கிறார். அவர் பேசியபோது, 'நேத்ரனுடன் நான் பல சீரியல்களில் இணைந்து நடித்துள்ளேன். சூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் கோபப்படமாட்டார். எப்போதும் பாசிட்டிவாக பேசுவார். அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். இப்போது தான் கொஞ்சம் முன்னேறி வந்தார். நேத்ரனுக்கு சொந்த வீடு கூட கிடையாது. அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார். அவருக்கு உடம்பு சரியில்லை என்று பார்க்க வருவதாக சொன்னோம். ஆனால், மறுத்துவிட்டார். ஆனால், சில தினங்களுக்கு முன் அவரது மகள் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு அழைத்தார். அவருக்கு உடநிலை சரியில்லாமல் இருந்தால் கூட அனைவருக்கும் மோடிவேஷ்னலாக பாசிட்டிவாக மெசேஜ் அனுப்புவார். ஆனால், அவரது மொபைலிலிருந்து அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி வந்தது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.