வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியராகம் தொடரில் கதிர் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார் குரு. அறிமுக தொடரிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர் கூட்டத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், கடந்தவாரம் குருவுக்கும் ரேச்சல் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. குருவும் ரேச்சலும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக ரசிகர்களும் குரு ரேச்சல் ஜோடிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.