மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர் தற்போது 'செவ்வந்தி' தொடரில் நடித்து வருகிறார். இவரது கணவர் அர்னவ் இவருக்கு துரோகம் செய்துவிட்டு அன்ஷிதா என்ற சக நடிகையுடன் சுற்றி வருவதாக திவ்யா ஸ்ரீதர் புகார் செய்திருந்தார். இந்த பிரச்னை அப்படியே இருக்க அர்னவ் அன்ஷிதாவுடன் ஜோடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று, பின் கடந்த வாரத்தில் எவிக்ட் ஆகி வெளியேறியிருந்தார். இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த திவ்யா ஸ்ரீதர், 'சிலர் அர்னவ்வை எனது முன்னாள் கணவர் என்று சொல்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. எங்களுக்கு இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். சிங்கிள் மதரா என் குழந்தைகளை வளர்க்க ரொம்பவே கஷ்டப்படுறேன். செவ்வந்தி டீம் எனக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க. இப்ப நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். நான் பிக்பாஸ் போறதா சிலர் சொல்றாங்க. என்னால் என் குழந்தைகளை பிரிஞ்சு இருக்க முடியாது. அதனால நான் பிக்பாஸ் வீட்டுக்கு போகல. நீங்க எல்லாரும் எனக்கு உறுதுணையா பக்கபலமா இருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நன்றி. உங்க எல்லாத்துக்கும் நான் கொடுக்கிற அட்வைஸ் ஒண்ணு தான் யாரையும் நம்பாதீங்க' என அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.