ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
இலங்கை தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக இருந்த தனுஷிக் இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீ நான் காதலி' தொடரில் அஞ்சலியாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். வாய்ப்பு தேடிய காலத்தில் ஆடிசன்களில் நேரடியாக அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுப்பீர்களாக என்று கேட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது : இலங்கையில் பணியாற்றும்போது இங்குள்ள மீடியா நண்பர்கள் அறிமுகமானார்கள். அவர்கள் தான் சென்னை வந்தால் நிறைய சாதிக்கலாம் என்றார்கள். அவர்களை நம்பி வந்தேன். ஆனால் அழைத்தவர்கள் பாதியிலேயே விட்டுவிட்டு போய்விட்டார்கள். தோழி வீட்டில் தங்கி இருந்து வாய்ப்பு தேடினேன். அவள்தான் என்னை முழுமையாக கவனித்துக் கொண்டாள், தங்க இடம் கொடுத்து, சாப்பாடு கொடுத்து ஆடிசன் செல்ல பணமும் கொடுத்தாள்.
'அன்பே வா' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. 'இனியா' தொடரிலும் நடித்தேன். ஜீ தமிழில் 'கார்த்திகை தீபம்' வாய்ப்பு வந்தது. அந்த சீரியலில் கார்த்திக்கின் முறைப் பொண்ணாக நடிச்சேன். சின்னரோல் தான், ஆனாலும் நெகட்டிவ் ரோல் அப்படிங்கிறதால அந்தக் கேரக்டர் ரீச் ஆகிடுச்சு. அந்தத் தொடருக்குப் பிறகு 'நீ நான் காதல்' தொடர் வாய்ப்பு கிடைச்சது. இப்போது அஞ்சலியாக எல்லோர் மனசிலேயும் இடம் பிடிச்சிருக்கேன்.
வாய்ப்பு தேடும்போது என்கிட்ட நேரடியாகவே அட்ஜெஸ்மென்ட் குறித்து கேட்டிருக்காங்க. 20 ஆடிஷன் போனா அதுல 5 ஆடிஷனில் இது நடந்திருக்கு. தீர்மானமாக 'நோ' சொல்லிட்டு வந்திருக்கேன். நடிக்க வருகிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் நான் சொல்றது கடின உழைப்பும், உங்கமேல உங்களுக்கு உள்ள நம்பிக்கையும் போதும். நோ சொல்லிப் பழகணும் என்று கூறியிருக்கிறார்.