வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழகத்தின் சில பகுதிகளில் ஸ்டார் விஜய் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் உட்பட தங்களுக்குப் பிடித்த ஸ்டார் சேனல்களை காண முடியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை பார்க்க முடியாமல் தவித்தனர். இது பற்றி தனியார் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் பொதுமக்கள் கேட்கையில், ஸ்டார் சேனல்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அப்படி எந்தவிதமான கட்டணமும் உயர்த்தப்படவில்லை என்று டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி டிஸ்னி ஸ்டார் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஸ்டார் விஜய் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படவில்லை. பல ஆண்டுகளாக, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது, தமிழகத்தில் உள்ள எங்கள் பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளது. பெண்கள் கிரிக்கெட் போட்டியின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு நிகழ்வு,” என்று குறிப்பிட்டுள்ளார்.