சின்னத்திரையில் சுந்தரி, திருமகள், மல்லி ஆகிய தொடர்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர் கிரேசி தங்கவேல். அண்மையில் இவர் தனது பெயரை துஷிதா என்று இன்ஸ்டாகிராமில் மாற்றி வைத்துள்ளார். இதுநாள் வரையில் வில்லியாக நடித்து வந்த துஷிதா புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கண்மணி அன்புடன் தொடரில் முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவீன் வெற்றி ஹீரோவாக நடிக்கும் இந்த தொடரில் துஷிதா, மதுமிதா என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இந்த முக்கோண காதல் கதையில் துஷிதாவின் கதாபாத்திரம் வில்லியாக மாறுமா? இல்லை நாயகியாக ஜொலிக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை இப்போதே தொற்றிக்கொண்டது.