ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
சின்னத்திரை நடிகர் வசந்த் வசி அக்னி நட்சத்திரம், பாரதிதாசன் காலனி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகியுள்ளார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியிட்டு வந்த நிலையில் கடந்த வாரம் எலிமேனேட் ஆகிவிட்டார். இதனையடுத்து ஊடகங்கள் இவரை வட்டமிட்டு பேட்டியெடுத்து வருகின்றனர். அவ்வாறாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'நான் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு முறையும் போராடி நூலிழையில் தோற்றுவிடுகிறேன். இது என்னுடைய வாழ்வில் பலமுறை நடந்திருக்கிறது. படங்களில் நடிக்க வேண்டும் பல முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
வேலையில்லா பட்டதாரி 2வில் நான் தான் பாலாஜி மோகன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. டயலாக் பேப்பரெல்லாம் வாங்கி மனப்பாடம் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் சென்றுவிட்டேன். ஆனால், கடைசி நேரத்தில் சவுந்தர்யா மேடம் என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னார். நானும் சென்றேன். அவருக்கு நான் சின்ன பையனாக இருப்பதாக தோன்றியிருக்கிறது. என்னை மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அன்று ஷூட்டிங் நடக்கவில்லை. நான் வீட்டிற்கு வந்து அழுதேன். கடைசியில் படம் ரிலீஸான போது பார்த்தால் பாலாஜி மோகன் நான் மனப்பாடம் செய்த அதே டயலாக்கை பேசினார். அதை பார்க்கு போது கஷ்டமாக இருந்தது' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.