'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
இலக்கியா மற்றும் சுந்தரி ஆகிய தொடர்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருகிறார் ஜெய் ஸ்ரீநிவாச குமார். ரசிகர்கள் மத்தியில் ஹீரோ இமேஜை பெற்றுள்ள இவருக்கு தற்போது உண்மையாகவே ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மீனா என்கிற புதிய தொடரில் ஜெய் ஸ்ரீநிவாச குமார் தான் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இதற்கிடையில் இலக்கியா தொடரில் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இலக்கியா தொடரிலிருந்து ஜெய் ஸ்ரீநிவாச முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம் சுந்தரி தொடரில் ஜெய் ஸ்ரீநிவாசா தொடர்ந்து சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இலக்கியா தொடரில் ஜெய் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இனி அரவிஷ் நடிக்க உள்ளதாகவும் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகி வருகிறது.