உலக நாயகன்னு அழைக்காதீங்க...: அஜித் பாணியில் கமல் எடுத்த முடிவு | 'அமரன்' வசூல் ரூ.250 கோடியைக் கடக்கும்! - பாக்ஸ் ஆபீஸ் தகவல் | 'கேம் சேஞ்சர்' டீசர் - மூன்று மொழிகளிலும் சேர்த்து சாதனை | புஷ்பா 2 படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா! | இரண்டாவது முறையாக இணையும் சிறுத்தை கூட்டணி! | புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு 7 நகரங்களுக்கு செல்லும் படக்குழு! | டெல்லி கணேஷ் மறைவு; திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி | ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு காஸ்ட்லி வாட்ச் பரிசளித்த சிவகார்த்திகேயன் | 10 நாட்களில் ரூ. 200 கோடி எட்டிய அமரன்; லக்கி பாஸ்கர் ரூ.77 கோடியை கடந்தது | மீண்டும் பிரபாஸுடன் இணையும் திரிஷா |
தமிழ் திரைப்படங்களில் தங்கை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தாரணி. பூவே உனக்காக, பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல படங்களில் இவரை நாம் பார்த்திருப்போம். அழகான தோற்றம் கொண்ட இவர் ஹீரோயினாக நடிப்பார் என்றே பலரும் கருதினர். அதற்கான வாய்ப்பும் தாரணிக்கு கிடைத்தது. ஆனால், அந்த படத்தின் கேமராமேன் தாரணியை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்து, விடாமல் டார்ச்சர் செய்துள்ளார்.
அதற்கு அவர் சம்மதிக்காமல் மறுத்துவிட, சூட்டிங்கின் போது அதிக சூடான லைட்டை தாரணி மீது அடித்து கஷ்டப்படுத்தியுள்ளார். இதன்காரணமாக தான் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க வேண்டிய தாரணி சோபிக்காமலேயே போய்விட்டாராம். அதன்பின் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கிய தாரணி தற்போது பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதுடன் அவ்வப்போது சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.