அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
குக் வித் கோமாளி சீசன் 4-ல் இந்த வார எலிமினேஷனாக நடிகர் ராஜ் ஐயப்பா வெளியேற்றப்பட்டுள்ளார். அஜித் குமாரின் நண்பரின் மகனான ராஜ் ஐயப்பாவை இயக்குனர் சாம் ஆண்டன் '100' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு வலிமை படத்திலும் அஜித்துக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு ராஜுக்கு கிடைத்தது. இரண்டு படங்களிலுமே ராஜ் ஐயப்பாவின் நடிப்பு பாராட்டிய பலரும் தமிழ் திரையுலகில் நிச்சயமாக இவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறியிருந்தனர்.
இந்நிலையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரியானார் ராஜ். முந்தைய சீசன்களில் இந்நிகழ்ச்சியின் மூலம் அதிக புகழ் பெற்ற அஸ்வின், தர்ஷன் போலவே ராஜ் ஐயப்பாவுக்கும் இறுதி வரை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாரத்திலேயே ராஜ் ஐயப்பா எலிமினேஷன் ஆகிவிட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் இப்படி ஏமாற்றத்துடன் வெளியேறிவிட்டாரே என ரசிகர்கள் அவருக்காக பரிதாபப்பட்டு வருகின்றனர்