ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
சின்னத்திரை நடிகரான ராகேவந்திரன் புலி 'கனா காணும் காலங்கள்', 'காற்றுக்கென்ன வேலி' உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். காமெடி நடிகர் ப்ளாக் பாண்டி போல இவரும் ஒரு ரவுண்டு வருவார் என பலரும் எதிர்பார்த்தனர். சீரியலில் நடித்துக்கொண்டிருந்த ராகவேந்திரன் நடிப்பதில் போதிய வருமானம் கிடைக்காததால் திரைத்துறையை விட்டே விலகி வேறு வேலைக்கு செல்வதாக அண்மையில் அறிவித்திருந்தார். இனி நடிக்கவேமாட்டேன் என விரக்தியில் பதிவிட்டிருந்த ராகவேந்திரன் தற்போது புதிய புராஜெக்ட் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார். அதற்காக உடல் எடையை அதிகரித்துக் கொண்டிருக்கும் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ராகவேந்திரனின் இந்த ரீ-என்ட்ரி வெற்றியடைய வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.