திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் |

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார் மாரிமுத்து. திரைப்படங்களில் உதவி இயக்குநராக தனது பயணத்தை ஆரம்பித்த மாரிமுத்து தமிழில் பல ஹிட் படங்களில் பணிபுரிந்துள்ளார். வாலி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த மாரிமுத்து அந்த படம் குறித்த சுவாரசியமான தகவலை அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
வாலி படத்தின் கதைப்படி ஹீரோயின் சிம்ரனுக்கு அண்ணன் அஜித் யார், தம்பி அஜித் யார் என்ற குழப்பம் இருக்கும். படத்தில் இதற்காக சில திரில்லிங்கான காட்சிகள் வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு காட்சியில் தொப்பியுடன் முகத்தை மறைத்து வரும் அஜித் மீசையை எடுத்திருப்பார். இருந்தாலும் அண்ணனா, தம்பியா என்ற பயத்தில் சிம்ரன் இருப்பார். அதன்பிறகு மனைவியின் குழப்பத்தை தீர்ப்பதற்காக தம்பி அஜித் மீசை எடுத்துக்கொண்டதாக விளக்கம் கூறுவார். சிம்ரனுக்கு பயம் போகும். இதை அண்ணன் அஜித்திடம் சொல்ல போகும் போது அண்ணனும் மீசை எடுத்திருப்பது போல் ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அஜித் இந்த காட்சியை கடைசியில் எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு அவர் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் மீசையை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். எனவே, அந்த காட்சி படமாக்கப்படவில்லை. இந்த காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தால் பார்ப்பவர்கள் நிச்சயமாக அதிர்ந்திருப்பார்கள் என்று அந்த பேட்டியில் மாரிமுத்து கூறியுள்ளார்.