ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், பல்வேறு கட்ட போட்டிகளுக்கு பிறகு நேற்றைய தினம் குக் வித் கோமாளி சீசன் 3-ன் இறுதிபோட்டி முடிந்து ஒளிபரப்பானது. இறுதிபோட்டியில் ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா, அம்மு அபிராமி, க்ரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் கலந்து கொண்டு போட்டியிட்டனர். 4 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியில் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் முதலிடத்தை பிடித்து குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. நடிகர் தர்ஷன் ரன்னர்-அப் பட்டத்தையும், அம்மு அபிராமி இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் வென்றுள்ளனர். இந்த சீசனின் ஆரம்பம் முதலே ஸ்ருதிகா அர்ஜுன் ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்தார். தற்போது அவர் டைட்டில் படத்தை வென்றதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.