லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக மே 8 அன்று ஒளிபரப்பாகவுள்ள 'அகண்டா' திரைப்படத்துடன் ஜீ தமிழின் கோடை பொழுபோக்கு கொண்டாட்டம் துவங்கவுள்ளது
அதிரடி-ஆக்ஷன் திரைப்படமான வலிமையை உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, உங்களது கோடையை கோலாகலமாக்கத் தயாராகிவிட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களின் 7 வாரங்களுக்கும் 7 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்பி, பொழுதுபோக்கினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது ஜீ தமிழ். மே 8, 2022, மாலை 4.30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபபரப்பாகவுள்ள, நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'அகண்டா' திரைப்படத்துடன் இந்த கோடைக் கொண்டாட்டம் உங்கள் ஜீ தமிழில் துவங்கவுள்ளது. போயபட்டி சீனு இயக்கியுள்ள 'அகண்டா' திரைப்படம் தனது நகரில் உள்ள அனைத்து கெட்டவர்களையும் எதிர்த்து நிற்கும் தீவிர சிவபக்தரான முரளி கிருஷ்ணாவின் (நந்தமுரி பாலகிருஷ்ணா) கதையைக் கூறுகிறது.