இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
இளைஞர்களின் கனவு கன்னியாக வெள்ளித்திரையில் சில காலங்கள் உச்சத்தில் இருந்தவர் நடிகை சோனியா அகர்வால். சமீப காலங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். இடையில் சில காலங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அவர் தற்போது சின்னத்திரையில் கெஸ்ட் ரோல்களில் நடித்து வருகிறார்.
'பாண்டவர் இல்லம்', ஜீ தமிழின் 'நினைத்தாலே இனிக்கும்' ஆகிய தொடர்களில் முன்னதாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்த அவர், தற்போது 'பூவே உனக்காக' தொடரிலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தொடரில் ஏற்கனவே வெள்ளித்திரை நடிகை சாயா சிங் வில்லியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சோனியா, சாயா என இரு வெள்ளித்திரை நடிகைகள் காம்போவில் இனி வரும் எபிசோடுகள் அதிக முக்கியத்துவம் பெறும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.