'ராமாயணா' படத்தில் ரஹ்மானுடன் இணைந்த ஹாலிவுட் 'ஆஸ்கர்' நாயகன் | 'மண்டாடி' யார்? : இயக்குனர் விளக்கம் | பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' |
விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் புலி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி அசத்தியவர் ராகவேந்திரன். இதனால் அவர் புலி ராகவேந்திரன் என்றே அழைக்கப்பட்டார். அவருக்கு திக்கு வாய் என்பதால் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதில் கிடைக்காது, ஆனாலும் அன்றைய காலக்கட்டத்தில் கனா காணும் காலங்கள் தொடரை எடுத்த படக்குழுவினர் ராகவேந்திரனை ஆதரித்து நடிக்க வைத்தது. அவரும் அங்கொன்றும் இங்கொன்றுமாய சில சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராகவேந்திரன், அந்த சீரியலை விட்டு விலகுவதோடு, இனி நடிக்கமாட்டேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'நான் 15 வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன். முன்னேற்றம் இல்லாமல் இன்றும் ஆரம்பித்த இடத்திலேயே தான் நிற்கிறேன். எனக்கு கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதுவும் சில காலங்களில் நீக்கப்பட்டு விடுகிறது. யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை என்கின்றனர். நானும் யாருக்கும் ஜால்ரா அடிக்க தயாராக இல்லை.
மாறன் கதாபாத்திரம் வேறு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இனி அதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி என்னை தூக்கி எறிந்துவிடுவார்கள். எனக்கும் பொருளாதார ரீதியாக கஷ்டம் இருக்கிறது. இனிமேலும் நடிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தால் எதுவுமே பண்ண முடியாது. நான் சீரியலை விட்டு விலகுகிறேன்' என உருக்கமாக பேசியுள்ளார்.