பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

விஜய் டிவியின் 'மதுர' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக களமிறங்கினார் ஆர் ஜே செந்தில். தொடர்ந்து சில படங்களிலும், விஜய் டிவியின் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது இரட்டை வேடத்தில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற தொடரில் நடித்து வருகிறார். இது மிக விரைவில் முடியப் போவதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் அவர் தற்போது மற்ற தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆர் ஜே செந்தில் நடுவராக பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 26 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிலையில் அவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள 'ஜகமே தந்திரம் கதைகள்' என்ற நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்யவுள்ளதாக தகவல்கள் மற்றும் சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. இந்த நிகழ்ச்சி அமீர் கானின் 'சத்யமேவ ஜெயதே', கோபிநாத்தின் 'குற்றம்' நிகழ்ச்சிகள் போல சமூகம் சார்ந்த பிரச்னைகளை பேசும் நிகழ்ச்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 27 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவும் 10:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.