சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் நேஹா மேனன். அவருக்கு வாணி ராணி நல்லதொரு அடையாளத்தை பெற்று தந்தது. சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நேஹா மேனனுக்கு தற்போது வயது 19. கொரோனா ஊரடங்குக்கு பிறகு தற்போது விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். நேஹா மேனன் திறமையான நடிகையாக இருந்தபோதிலும், அவர் சற்று குண்டாக இருப்பதால் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது உருவகேலிக்கும் ஆளாகிறார்.
சமீபத்தில் அவரது தாயார் இரண்டாவது குழந்தைக்கு தாயான செய்தியை பகிர்ந்த போதும் பலர் ஆபாசமான கருத்துகளையே பேசி வந்தனர். அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு பாசிட்டிவாக அவரும் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். இருப்பினும் விடாது துரத்தும் நெட்டிசன்கள் அவரை மீண்டும் மீண்டும் உருவ கேலி செய்து வருகின்றனர். இதனால் கோபமான நேஹா, 'இன்னும் எத்தன் பேர் தான் இதே கேள்விய கேப்பீங்க? ஏன் ஒருத்தரோட ஆடை, எடை, உருவத்த பத்தி நீங்க கவலபடுறீங்க? அத தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க? இந்த மாதிரி கேக்குறது முதல் தடவ இல்ல' என காட்டமாக கூறியுள்ளார்.