'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள படம் பிரேமம். மலையாளத்தில் மட்டுமல்லாமல் பிறமொழி ரசிகர்களையும் அந்த படம் கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் மடோனா செபஸ்டியன். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். விரைவில் அவர் நடித்த 'கொம்புவச்ச சிங்கம்டா படம் வெளியாகவுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார். அதோடு கொஞ்சம் கவர்ச்சியாகவும் போட்டோக்களை வெளியிட தொடங்கி உள்ளார். அந்த வகையில் புதிதாக கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.




