பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா உலகத்திலும் சமந்தா, நாக சைதன்யா தம்பதியரைப் பற்றிய செய்திகள்தான் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன. இருவரும் பிரிய உள்ளதாக, பிரிந்துவிட்டதாக, விரைவில் விவாகரத்து என விதவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றிற்கு இன்னும் எண்ணெய் ஊற்றுவது போல சில சம்பவங்களும் நடக்கின்றன. சமீபத்தில் நாக சைதன்யா நடித்து நேற்று வெளிவந்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் நிகழ்ச்சிக்கு ஆமீர் கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அவருக்கு ஐதராபாத்தில் நாகார்ஜுனா குடும்பத்தினர் விருந்து அளித்தனர். அதில் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, மகன்கள் நாக சைதன்யா, அகில் மற்றும் 'லவ் ஸ்டோரி' பட இயக்குனர் சேகர் கம்முலா, படத்தின் கதாநாயகி சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விருந்தில் சமந்தா காணப்படவில்லை. அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி சமந்தா, நாக சைதன்யா விவகாரத்திற்கு மேலும் ஒரு புது செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆமீர்கான் நடித்து வரும் 'லால் சிங் சட்டா' என்ற படத்தில் அவருடன் நாக சைதன்யாவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.