போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற உலக ரோஜா தின கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன் பங்கேற்று புற்றுநோயால் பாதிக்கப்படட குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அந்த குழந்தைகளுக்கு ரோஜா பூ கொடுத்தார். நீங்கள் தான் உண்மையான லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் கலந்துரையாடினார்.
கடந்த வருடமே என்னை அழைத்திருந்தார்கள். அப்போது என்னால் வரமுடியவில்லை. எனவே இந்த வருடம் கண்டிப்பாக வரவேண்டும் என்று முடிவு செய்து வந்துள்ளேன். குழந்தைகள் என்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த ஒரு காரணத்திற்காக தான் வந்தேன். நம்மால் முடிந்த அளவு நேர்மறை எண்ணங்களை கொடுப்போம்" என்று தெரிவித்துள்ளார். சிம்புவின் இந்த செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.