பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! |

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 65வது படம். இந்தப் படத்திற்குப் பிறகு விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் வம்சி இரு வேறு பேட்டிகளில் அந்தப் படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் மகேஷ் பாபுவுக்காக வம்சி சொன்ன கதையில் தான் விஜய் நடிக்க உள்ளாராம். வம்சியும், மகேஷ் பாபுவும் இணைந்து 'மகரிஷி' படத்தைக் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு வம்சி சொன்ன கதையை மகேஷ் பாபு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். அதே கதையைத்தான் விஜய்க்குச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார் வம்சி.
தற்போது கதையில் தமிழுக்கேற்றபடி சில மாற்றங்களைச் செய்து, கதாபாத்திரத்திலும் சில மாற்றங்களைச் செய்து மெருகேற்றி வருகிறார்களாம். ஸ்கிரிப்ட் வேலைகள் முழுவதுமாக முடிந்த பின் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். இப்படம் மூலம் தெலுங்கிலும் நேரடியாக நடிக்க உள்ளார் விஜய். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராக உள்ளது.
இப்படத்திற்காக விஜய்க்கு 100 கோடி சம்பளம் என்கிறது கோலிவுட் வட்டாரம். தமிழில் ரஜினிக்குப் போட்டியாக அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் தானாம். அவர் வாங்கும் சம்பளத்தை விட குறைவான சம்பளம்தான் அஜித்திற்கு என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.