என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
இலங்கையில் நடந்த இறுதிப்போரை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் கூட பேமிலிமேன்-2 என்ற வெப் தொடர் இலங்கை பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதில் சமந்தா இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். இந்த தொடரை ஒளிபரப்பு செய்ய எதிர்ப்புகள் எழுந்தது, என்றாலும் அது வெளியானது.
இந்த நிலையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து விட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவரான நடிகை லாஸ்லியாவிடத்தில் இலங்கை தமிழ்ப் பெண்ணான நீங்கள் இலங்கை பிரச்சினையை மையமாக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛அந்த மாதிரி கதைகளில் நடிக்கவே மட்டேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் இலங்கையில் வாழ்ந்தவள் என்ற முறையில் அங்கு நடந்த கொடுமையை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த சம்பவங்களை உயிருள்ள வரை என்னால் மறக்க முடியாது. அதனால் அதுபோன்ற ஒரு கதைகளில் நடிப்பதைகூட எனது மனம் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.
ஹர்பஜன்சிங் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்த லாஸ்லியா, அடுத்தபடியாக ஆரியுடன் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.