ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் |
துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும், வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.
அந்தவகையில் கேரளாவின் அடையாளமாக திகழும் மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவருக்கும் சமீபத்தில் கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அதை தொடர்ந்து முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டொவினோ தாமஸும் கோல்டன் விசா பெற்றார்.
இந்த நிலையில் தந்தை மம்முட்டியை தொடர்ந்து மகன் துல்கர் சல்மானுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு. இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள துல்கர் சல்மான், “எதிர்காலத்தில் அபுதாபி அரசு சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் இன்னும் அதிக கவனம் எடுத்து திட்டங்களை செயல்படுத்தப் போவதாக கூறியுள்ளனர். அந்தவகையில் வரும் காலங்களில் சினிமா தொடர்பாக அதிக நாட்கள் இங்கேயே செலவிடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்