ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் விஜய்யே பார்த்து வியந்து போகிற ஒரு நடிகர் என்றால் அவர் தனுஷ் தான். ஒரு மேடையில் தமிழ் சினிமாவில் என்னை நடிப்பால் கவர்ந்த தற்போதைய நடிகர் தனுஷ் என்று வெளிப்படையாகவே பேசி அவருக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்தார் விஜய்.
அப்படி விஜய்யை கவர்ந்த தனுஷ் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்காக ஒரு பாடலை பின்னணி பாடப்போகிறார். முதன்முறையாக விஜய்க்காக இந்த படத்தில் பாடப்போகிறார் தனுஷ். அதோடு தங்க மகனுக்கு பிறகு மீண்டும் அனிருத் இசையில் தனுஷ் பாடுகிறார் என்பது இன்னொரு புதிய தகவல்.
விஜய்யின் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ஆக, விஜய் படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் என்ற இரண்டு ஹீரோக்களின் பங்களிப்பும் இடம் பெறப்போகிறது.